இதுவரை 103 முன்னாள் போராளிகள் மர்மசாவு! சர்வதேச நடவடிக்கை அவசியம்!! வடக்கு முதல்வர்
புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்களில் இதுவரை 103பேர் இறந்துள்ளது என்பது ஓர் பாரதூரமான பிரச்சணை இதனை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டிய அவசியம் உண்டு என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தின் பின்பு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட 103பேர் ஒரே விதமான புற்றுநோய் அல்லது மர்மநோயின் காரணமாக இறப்பதனால் இது புனர்வாழ்வு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்காலத்தில் நிகழ்ந்த வைத்தியத்தில் ஏதாவது திட்டமிட்ட மோசடி இருக்குமா என அஞ்சப்படுவது தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து இறுதி யுத்தத்தின் பின்னர் படையினரிடம் சரண்டைந்து புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்களில் இதுவரை 103பேர் இறந்துள்ளது என்பது ஓர் பாரதூரமான விடயம். இதனை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டிய அவசியமும் உண்டு .
இவ்வாறான இறப்புக்களில் ஒரேவிதமான தன்மை கானப்படின் அது நிச்சயமாக பாரதூரமான விடயம். மீண்டும் இந்த வகையில் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுடைய சரியான மருத்துவ சான்றிதழ் செய்து கொள்ளப்படவேண்டும். இவ்வாறு செய்யப்படும் சான்றுகளின் அடிப்படையில் அதனை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டிய அவசியம் உண்டு.
இவற்றினை நாம் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். இறந்த சகலரதும் இல்லாது விடினும் ஒரு சிலருடகயதையேனும் அறிக்கைகளையும் மேலும் இவ்வாறு இடம்பெற்றால் அதன் விரிவான அறிக்கையினையும் பெற்றுக்கொண்டால் நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறான மரணங்கள் நிகழ்வது ஓர் கொடூரமான நிலமை. இது தொடர்பில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்றார்.
இதுவரை 103 முன்னாள் போராளிகள் மர்மசாவு! சர்வதேச நடவடிக்கை அவசியம்!! வடக்கு முதல்வர்
Reviewed by Author
on
July 05, 2016
Rating:

No comments:
Post a Comment