ஜெனிவா வாக்குறுதிகளில் 11 வீதமானவற்றையே இலங்கை நிறைவேற்றியுள்ளது!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் அளித்திருந்த வாக்குறுதிகளில் 11 வீதத்தை மாத்திரம் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பைத் தளமாகக் கொண்ட, வெரிட்டே என்ற ஆய்வு அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு நிறுவப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 20 வீதம் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கியுள்ள வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில் பொதுவாக மந்தநிலை காணப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
30/1 தீர்மானத்தில், கொடுக்கப்பட்ட 36 வாக்குறுதிகளில், 4 வாக்குறுதிகள் மாத்திரம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், குறிப்பாக 22 வாக்குறுதிகள் விடயத்தில், மிகமோசமான நிலையே உள்ளது.
61.1 வீதமான விடயங்களில், முன்னேற்றங்கள் மிக மோசமாக உள்ளன. 25 வீதமான விடயங்களில், பகுதியளவான முன்னேற்றங்களே காணப்படுகின்றன.
2.8 வீதமான விடயங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. 11.1 வீதமான விடயங்களில் மாத்திரம் அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் 189 பரிந்துரைகளில், 20 வீதம் மாத்திரமே, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் 57 வீதமான பரிந்துரைகள் பகுதியளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 22 வீதமான பரிந்துரைகள் விடயத்தில் மோசமான நிலை காணப்படுவதாகவும் வெரிட்டே ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனிவா வாக்குறுதிகளில் 11 வீதமானவற்றையே இலங்கை நிறைவேற்றியுள்ளது!
Reviewed by Author
on
July 04, 2016
Rating:
Reviewed by Author
on
July 04, 2016
Rating:


No comments:
Post a Comment