வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் 18வது பொதுக்கூட்டம் பொருளாதாரம்
வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் 18 வது பொதுக்கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், தர்மபால, புத்திதாக அன்றைய தினம் வடமாகாண சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட செந்தில்நாதன் மயூரன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் வடக்கு இணைப்பாளர், வவுனியா நகரபகுதி, கிராம சேவகர், இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை பிரதிநிதிகள், வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளத்தின் தலைவர், வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் மற்றும் பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் பா.டெனிஸ்வரன் மிக விரைவாக சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் நடவடிக்கையில் உரிமையாளர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்றும் அவர்களின் அசமந்த போக்கினாலேயே கூடுதலான விபத்துக்களும் பயணிகளுக்கு அசோகரியங்களும் ஏற்படுவதாகவும், போட்டித்தன்மையில் ஒரு வழித்தடத்தில் ஒரே நேரத்தில் பேருந்துகளை இயக்குவதால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் அமுலாக்கப்படவிருக்கின்ற நியத்திச் சட்டத்தில் ஓட்டைகள் இல்லையெனவும் இருந்தும் ஏதேனும் ஓட்டையூடாக எவரேனும் உள்நுழைந்தால் அவர் அதிலிருந்து வெளியில் வர முடியாது எனவும் தெரிவித்தார்.
தனது வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயலாற்றிய புதிதாக வடமாகாண சபை உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள செந்தில்நாதன் மயூரன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்ததோடு வவுனியா மாவட்டத்தில் போக்குவரத்து சம்பந்தமான பொறுப்புக்களை வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மிகவும் நல்லமுறையில் ஒற்றுமையோடு செயற்படுவதாகவும் மேலும் பல சேவைகளை அவர்கள் மக்களுக்கு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிருவாக உறுப்பினர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் 18வது பொதுக்கூட்டம் பொருளாதாரம்
Reviewed by Author
on
July 10, 2016
Rating:

No comments:
Post a Comment