அண்மைய செய்திகள்

recent
-

சிங்கள கலை இலக்கியங்களை வளர்ப்பதில் தமிழர்கள் முதன்மையானவர்கள்! சிறிதரன் எம்.பி...


யாழ்.பல்கலைகழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது கவலையளிப்பதாக தமிழ் தேசியக் கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த மோதல் சம்பவத்தின் பின்னணியில் பல காரணிகள் இருப்பதனையும் நாங்கள் கவனத்தில்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கண்டிய நடனம் குறித்த நாம் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றோம். 1970ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் தென் பகுதியிலிருந்து வட பகுதியில் அமைந்துள்ள கோயில்களுக்கு யானைகள் கொண்டு வரப்பட்டன.

இவ்வாறு யானைகள் கொண்டு வரப்பட்ட போதே கண்டிய நடனமும் வட பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. எனினும், 1974ஆம் ஆண்டில் இடம்பெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் போது ஒன்பது பேர் கொலை செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் தென் பகுதி கலை வடிவங்கள் என்பது அதிகார ஆக்கிரமிப்பின் ஒரு சின்னங்களாக தமிழ் மக்கள் பார்க்க தொடங்கினர்.

எவ்வாறாயினும், சிங்கள கலை இலக்கியங்களை வளர்ப்பதில் தமிழர்கள் முதன்மையானவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்கள கலை இலக்கியங்களை வளர்ப்பதில் தமிழர்கள் முதன்மையானவர்கள்! சிறிதரன் எம்.பி... Reviewed by Author on July 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.