அண்மைய செய்திகள்

recent
-

தவறான புரளிகள் காரணமாக .....கிழக்கிலிருந்து வடக்கிற்கு கை மாறவுள்ள அபிவிருத்தி திட்டம்!


மட்டக்களப்பு மாவட்டத்தின் மீன்பிடி மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட 4000 மில்லியன் ரூபா பெறுமதியான கருத்திட்டம் மீளப்பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த விடயம் தொடர்பிர் மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர 'தி ஐலன்ட்' பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப்பிரதேசத்தில் தேசிய நீரியல் வள பண்ணை ஒன்றை அமைக்க தமது அமைச்சு திட்டமிட்டிருந்தது.

இதன் மூலம் சுமார் 10,000 வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சுமார் 1200 ஏக்கர் காணி பயன்படுததப்படும்.

கிழக்கு மாகாணத்தின் சில அரசியல் தலைமைகளும் அரசசார்பற்ற நிறுவனங்களும் ஒரு சில வலுவற்ற காரணங்களைக் கூறி தொடர்ச்சியாக இத் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.

இந்த பிரதேசத்திலுள்ள இத்தகைய எதிரணியினரின் தவறான புரளிகள் காரணமாக பொதுமக்களும் இதனை எதிர்க்கின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு இக்கருத்திட்டம் தேவையற்றதாக மாறியுள்ள நிலையில் அதனை வடமாகாணத்தில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் மூலம் மட்டக்களப்பு மக்களின் வருமானம் ஈட்டும் சந்தர்ப்பங்களும் இல்லாமல் போகும் என அவர் மேலும் தெரிவத்துள்ளார்.

தவறான புரளிகள் காரணமாக .....கிழக்கிலிருந்து வடக்கிற்கு கை மாறவுள்ள அபிவிருத்தி திட்டம்! Reviewed by Author on July 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.