யாழ் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் அனுட்டிப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று தமிழீழ விடுதலை புலிகளின் கரும்புலிகள் நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடும் இடத்தில் இன்று யூலை ஐந்தாம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 அளவில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு, மிகவும் உணர்வுபூர்வமாக கரும்புலிகள் நாள் நினைவு கூறப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இடத்திலுள்ள சுவரில் கரும்புலிகள் நாள் – 2016 என எழுதப்பட்டு கரும்புலி மில்லரின் உருவப்படம் வைக்கப்பட்டு அவற்றுக்கு முன்னால் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு கரும்புலிகள் நாள் நினைவுகூறப்பட்டடது.
பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ள இந்த நிகழ்வு குறித்த தகவல்கள் வெளியில் பரவியதை அடுத்து, இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறையினர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை நோக்கி அதிக கவனத்தை திருப்பியுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1987 ஆம் ஆண்டு யூலை ஐந்தாம் திகதி யாழ்ப்பாணம் நெல்லியடியில் முதலாவது கரும்புலியான கப்டன் மில்லர் என்றழைக்கப்பட்ட வல்லிபுரம் வசந்தன், இராணுவ டிரக் வண்டி மீது நடத்திய தாக்குதலே தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட முதலாவது கரும்புலித் தாக்குதலாக அமைந்துள்ளது.
இதனையடுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கரும்புலிகளை கௌரப்படுத்தும் வகையில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 2009 ஆம் ஆண்டு வரை கப்டன் மில்லர் உயிர்நீத்த தினமான யூலை ஐந்தாம் திகதியை கரும்புலிகள் தினமாக விடுதலைப் புலிகள் பெரும் எடுப்பில் அனுஷ்டித்து வந்தனர்.
மறுமுனையில் கப்டன் மில்லர் உட்பட கரும்புலிகளை கௌரவிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் கரும்புலி நினைவுத் தினத்தில் ஸ்ரீலங்கா அரச படையினர் மீது பாரிய தாக்குதல்களை நடாத்தி வந்தனர்.
இதனால் ஸ்ரீலங்கா அரச படையினர் யூலை ஐந்தாம் திகதியை முக்கிய தினமாக கருதி உசார் நிலையில் வைக்கப்பட்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
July 05, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 05, 2016
Rating:

No comments:
Post a Comment