அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கில் நவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை! மலேசியா இணக்கம்....


கிழக்கு மாகாணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை ஒன்றினை நிர்மானித்து தர மலேசியா இணக்கம் வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட மலேசியா இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மலேசிய ஜொஹோர் மாநில முதலமைச்சரின் தூதுக் குழு, மலேசிய தொழிற்துறை அபிவிருத்தி சிரேஷ்ட பிரதித் தலைவர் அமினுடீன் பின் தவம் தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்தித்து கலந்துரையாடியிருந்தது.

இந்த சந்திப்பு கிழக்கு முதலமைச்சரின் கொழும்பு காரியாலயத்தில் இன்று காலை 11 மணிக்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது உரையாற்றிய அமினுடீன் பின் தவம் இவ்வாறு கூறியுள்ளார், கிழக்கு மாகாணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது.

இதில் தனியார் துறையில் பட்டங்களை பெற்ற பலருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதுடன் சகல நோய்களுக்குமான ஒரு சிறந்த வைத்தியசாலையாகவும் அமையவுள்ளது.

அத்துடன், கிழக்கிலிருந்து மருத்துவ தேவைக்காக வெளியிடங்களுக்கு செல்வதனைத் தடுத்து, சிறந்த வைத்திய சேவை இதன் மூலம் பெற்றுகொடுக்கப்படும்.

இதேவேளை, கிழக்கு முதலமைச்சரின் இந்த யோசனை விரைவில் வெற்றியடைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் நவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை! மலேசியா இணக்கம்.... Reviewed by Author on July 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.