அண்மைய செய்திகள்

recent
-

உலகின் முதலாவது சதுப்புநிலங்கள் அடங்கிய அருங்காட்சியகம் இலங்கையில்!


உலகின் முதலாவது சதுப்பு நிலங்களை கொண்ட அருங்காட்சியகம் சிலாபம்-பம்பளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அருங்காட்சியகம் ஊடாக சதுப்பு நிலத் தாவரங்கள் தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகம் மூலம் சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பில் சிறுவர்கள் மற்றும் வளர்ந்தோரை அறிவுறுத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சதுப்பு நிலங்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட இந்த வருடத்தில் 20,000 மாணவர்கள் வருகைத் தருவர் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சதுப்பு நிலங்களை பாதுகாப்பது இலங்கையின் தேசிய கடப்பாடு என்றும், குறித்த அருங்காட்சியகத்தின் ஊடாக இலங்கையில் அழிவுக்குள்ளாகும் சதுப்பு நிலங்களை பாதுகாக்க முடியும் எனவும் இதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த வருடத்தில் ஆசியாவில் சதுப்பு நிலங்கள் தாவரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி ஒரு ஹெக்டெயர் சதுப்பு நிலத்தின் பெறுமதி 194,000 அமெரிக்க டொலர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதற்கமைய தற்போது 15000 ஹெக்டேயர் சதுப்பு நிலங்கள் இலங்கையில் காணப்படுவதாகவும், அதன் பொருளாதார பெறுமதியானது 42,900 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் முதலாவது சதுப்புநிலங்கள் அடங்கிய அருங்காட்சியகம் இலங்கையில்! Reviewed by Author on July 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.