யாழ்.பல்கலைக்கழகம் திரும்பும் சிங்கள மாணவர்கள்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து வெளியேறிய சிங்கள மாணவர்கள் மீளவும் அங்கு திரும்பியுள்ளனர்
தமது கல்வி நடவடிக்கைகளை தொடரும் நோக்கிலேயே அவர்கள் அங்கு சென்றுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கிடையேயான கருத்து முரண்பாட்டை நீக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள மேற்கொண்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் பீ.ஜி.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் பொறியியல் துறை மாணவர்களின் வருகை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விஞ்ஞான பீட மாணவர்களின் வருகையும் திருப்திகரமான நிலையில் உள்ளதாகவும் பீ.ஜி.ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகம் திரும்பும் சிங்கள மாணவர்கள்!
Reviewed by Author
on
July 30, 2016
Rating:

No comments:
Post a Comment