பாவனைக்கு வழங்கப்படாத முழங்காவில் பொதுச்சந்தை கட்டடத்தொகுதி! வணிகர்கள் குற்றச்சாட்டு
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முழங்காவில் பொதுச்சந்தை கட்டடத்தொகுதி ஒன்று கடந்த மூன்று வருடகாலமாக வணிகர்களின் பாவனைக்கு கையளிக்கப்படாததால் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவ்வூர் வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது தொடர்பாக வணிகர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்கள் செறிவாக வாழ்கின்ற இவ் முழங்காவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ் பொதுச்சந்தை கட்டடத்தொகுதியானது, பாதுகாப்பற்ற கதவுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வணிகர்களாகிய எமது பாவனைக்கு இன்னமும் விடப்படாத நிலையில் இருப்பது பூநகரி பிரதேசசபையின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகின்றது.
மேலும் வணிகத்தினை மேற்கொள்வதற்கு பலசிரமங்களை எதிர்கொள்வதாகவும் வெற்றிலைக்கடை ஓரிடத்திலும் பழக்கடை ஓரிடத்திலும் மற்றும் பலசரக்குக் கடை ஓரிடத்திலும் இருப்பதனால் தமது வியாபாரங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடத் தொகுதியினை பாதுகாப்பான முறையில் மாற்றி, வர்த்தகர்கள் அனைவரும் ஓரிடத்தில் வணிகம் புரிவதற்கு வெகுவிரைவில் திறந்து தமக்கு கையளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாவனைக்கு வழங்கப்படாத முழங்காவில் பொதுச்சந்தை கட்டடத்தொகுதி! வணிகர்கள் குற்றச்சாட்டு
Reviewed by NEWMANNAR
on
July 28, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 28, 2016
Rating:

No comments:
Post a Comment