பொருளாதார மத்திய நிலையத்திற்கான உரிய இடத்தை தீர்மானிக்க முடியாத உங்களினால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும்?
பொருளாதார மத்திய நிலையத்திற்கு உரிய இடத்தை தீர்மானிக்க முடியாமல் தடுமாறும் உங்களால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும் என்னும் ஐயம் எழுகின்றது என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று (4) திங்கட்கிழமை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பாக மிக நீண்ட வாதப் பிரதிவாதம் தொடர்கிறது.
வடக்கில் உள்ள ஐந்து மாவட்டத்திற்கும் மத்திய இடத்திலேயே இவ்வாறான மையம் அமைவது யாவருக்கும் பயன்மிக்கதாக காணப்படும்.
எனவே குறுகிய அரசியல் இலாப நோக்குடன் ஓமந்தையா? தாண்டிக்குளமா? என பட்டிமன்றமா நடத்துகின்றீர்கள்.
உங்களது அரசியல் சித்து விளையாட்டிற்கு கருத்துக்கணிப்பு நடாத்தி முடிவுறுத்தப் போவது மிகவும் வேடிக்கையான நகைச்சுவையாகும்.
நீணட கால அடிப்படையில் வடக்கில் உள்ள ஐந்து மாவட்டத்திற்கும் பொதுவான பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதே யதார்த்தமான தூரநோக்கு சிந்தனையாகும்.
அவ்வாறு நோக்குகையில் ஓமந்தை, அல்லது மாங்குளமே பொருத்தமாகும்.
பொருளாதார வல்லுனர்களுடனும் கருத்தியாளர்களுடனும் ஆலோசித்து எடுக்கப்பட வேண்டிய தீhமானத்தை யாவற்றுக்கும் இலாப நோக்கு பார்க்கும் அரசியல் வாதிகளின் எடுகோள் வாதங்கள் ஏற்புடையது அல்ல.
எனவே வவுனியாவிற்கு எந்த இடம் பொருத்தம் என்பது முக்கியமல்ல.
வடமாகாணத்திற்கு எந்த இடம் பொருத்தமாக அமையும் என்பதே அவசியம்.அவ்வாறுதான் சிந்திக்க வேண்டும்.
அதை விடுத்து மாறு பட்டு விவாதிப்பது நிலையாக பயன் தரவல்லது அல்ல.
ஆகவே ஓமந்தை அல்லது மாங்குளமே பொருத்தமாக அமையும் என்பதே எமது வேண்டுகை என்பதுடன் பொருளாதார மத்திய நிலையத்திற்கே இடத்தை தீர்மாணிக்க முடியாமல் தடுமாறும் உங்களால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும் என்னும் ஐயமும் எழுகின்றது.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார மத்திய நிலையத்திற்கான உரிய இடத்தை தீர்மானிக்க முடியாத உங்களினால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும்?
Reviewed by NEWMANNAR
on
July 04, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 04, 2016
Rating:


No comments:
Post a Comment