அண்மைய செய்திகள்

recent
-

தனியார் காணியில் அடாத்தாக விகாரை; காணி உரிமையாளர் நீதிமன்றில் முறைப்பாடு

கொக்கிளாய் பிரதேசத்தில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றில் புத்தபிக்கு ஒருவர் அடா த்தாக விகாரை அமைந்து வரும்நிலையில் அந்தக் காணியைப் பெற்றுத்தருமாறு அதன் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினரின் உதவியுடன் புத்த பிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை அமைத்து வருகின்றார். குறித்த காணியானது முல்லைத்தீவிலிருந்து 35 கிலோமீற்றர் தொலைவில் கொக்கிளாய் வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

சோமசுந்தரம் திருஞானசம்பந்தருக்குச் சொந்தமான குறித்த காணியில் அரை ஏக்கர் காணியானது விகாரைக்காக அடாத்தாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக காணியின் உரிமையாளரின் மூத்த மகனான திருஞானசம்பந்தர் மணிவண்ணதாஸ் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோது, காணி உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அத்துடன் குறித்த விகாரை அமைப்பதற்கும் நீதிமன்றம் தடை செய்திருந்தது. ஆனாலும் இராணுவத்தினரின் ஒத்தாசையுடன் புத்த பிக்கு விகாரை கட்டும் பணியை முன்னெடுத்து வந்திருந்தார்.

இந்நிலையில் தனது காணி தனக்குத் தேவையெனவும், வேறு இடங்க ளில் தனக்கு காணி எதுவும் தேவையில்லையெனவும் மணிவண்ணதாஸ் தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு முல்லைத்தீவில் மீள்குடியேற்றத்தின் பின்னர் இதுவரை 9 பெரிய விகாரைகள் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனியார் காணியில் அடாத்தாக விகாரை; காணி உரிமையாளர் நீதிமன்றில் முறைப்பாடு Reviewed by NEWMANNAR on July 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.