பரந்தனில் வாகன விபத்து; முதியவர் மரணம்
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கார் ஒன்று முன்னால் சென்று கொண் டிருந்த துவிச்சக்கர வண்டி மீது வேகக் கட்டுப் பாட்டை இழந்து மோதியுள்ளது.
இதனால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 64 வயதுடைய பரந்தனை சேர்ந்த சண்முகன் என்ற முதியவர் படுகாயமடைந்துள்ளார்.
உடனடியாக படுகாயமடைந்த முதியவரை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய கார் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கிளிநொச்சி பொலிஸார் மேலதிக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பரந்தனில் வாகன விபத்து; முதியவர் மரணம்
Reviewed by NEWMANNAR
on
July 27, 2016
Rating:

No comments:
Post a Comment