பிரிட்டன் பாராளுமன்றம் தற்காலிகமாக மூடப்பட்டது!
பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சந்தேகத்திற்கிடமான சிறிய பார்சல் வந்ததை அடுத்து பாராளுமன்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இன்று சந்தேகத்திற்கு இடமான சிறிய பார்சல் ஒன்று வந்துள்ளது.
அந்த பார்சலை பரிசோதித்த போது அதில் வெள்ளை பவுடர் இருந்துள்ளது. இதனை அடுத்து பாராளுமன்றம் உடனடியாக மூடப்பட்டது.
பார்சலில் வந்த வெள்ளை பவுடர் மரணத்தை விளைவிக்க கூடியதா அல்லது ஆபத்தான வைரஸா என்பது பற்றி போலீசார் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
மெட்ரோ ரயில் உட்பட இங்கிலாந்து பொதுப்போக்குவரத்து மீது 2005-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 52 பேர் பலியானார்கள்.
இந்த தாக்குதலின் 11-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சந்தேகத்திற்கு சிறிய பார்சல் வந்தது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் பாராளுமன்றம் தற்காலிகமாக மூடப்பட்டது!
Reviewed by NEWMANNAR
on
July 08, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 08, 2016
Rating:


No comments:
Post a Comment