இரா.சம்பந்தனை சந்தித்தார் கனேடிய வெளிவிவகார அமைச்சர்!
இலங்கைக்கு வியஜம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பில் கூட்டமைப்பின், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, நல்லிணக்கம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம், பொறுப்புக்கூறல், தமிழ் மக்களின் உடனடித் தேவைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கினால், அது தேசிய இனப்பிரச்சனைக்கு ஓர் தீர்வாக அமையும். அதற்கான சந்தர்ப்பம் தற்போது அமைந்துள்ளது.
அந்த செயற்றிட்டத்தில், நாங்கள் பொறுப்பாக ஈடுபட்டிருக்கிறோம் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தியுள்ள கனடாவின் புதிய வெளிவிவகார அமைச்சர், நல்லிணக்கம், புதிய அரசியலமைப்பு, பொறுப்புக்கூறல், தமிழ் மக்களின் உடனடித் தேவைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு உதவிகளை வழங்கவிருப்பதாக அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தனை சந்தித்தார் கனேடிய வெளிவிவகார அமைச்சர்!
Reviewed by Author
on
July 29, 2016
Rating:

No comments:
Post a Comment