வங்காலையில் வலம்புரித் தேரில் புனித ஆனாள் அன்னை கண்கொள்ளாகாட்சி....பக்தர்கள் சாட்சி...படங்கள் இணைப்பு
மன்னார் மறைமாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குள் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த கிராமமான வங்காலை கிராமத்தின் பாதுகாவளியாம் புனித ஆனாள் ஆலய திருவிழா பங்கு தந்தை அருட்பணி.எஸ்.ஜெயபாலன் அடிகளார் தலைமையில் வெகு விமரிசையாக அவ் கிராம மக்களால் 26.07.2016 செவ்வாய் கிழமை அன்று கொண்டாடப்பட்டது.
இவ் விழாவுக்கான முதல்நாள் திங்கள் கிழமை திவ்விய நற்கருணை பவனியும் ஆசீரும் இடம்பெற்றது.
இவ் விழாவில் பெருந்தொகையான பக்தர்கள் உள்ளுர் வெளியூர்களிலிருந்தும் கலந்து கொண்டதுடன் அதிகமான அருட்பணியாளர்கள் கன்னியாஸ்திரிகள் துறவிகளும் கலந்து கொண்டனர்.
திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு யோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
ஆயர் தனது ஆரம்ப உரையில் வங்காலை கிராமம் அதிகமான குருக்களை உருவாக்கி தந்தமை மன்னார் மறைமாவட்டத்துக்கு பெருமை மட்டுமல்ல வெளி உலகிலும் இவ் கிராம குருக்கள் பணி செய்து வருவது எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என தெரிவித்தார்.
திருப்பலியைத் தொடர்ந்து வலம்புரிச் சங்கு அமைப்பில் உருவாக்கப்பட்ட தேரில் புனித.ஆனாள் அன்னையானவள் அங்கு குழுமியிருந்த பக்தர்கள் மத்தியில் வலம் வந்தததுடன் ஆயர் அவர்களால் திருச்சுரூப ஆசீரும் வழங்கப்பட்டது.
வலம்புரித் தேரில் புனித ஆனாள் அன்னை கண்கொள்ளாகாட்சி....
பக்தர்கள் சாட்சி...
அன்னையவளின் இறையாட்சி
அகிலமெங்கும் அவளாட்சி,,,,,,,,,,,,
வங்காலையில் வலம்புரித் தேரில் புனித ஆனாள் அன்னை கண்கொள்ளாகாட்சி....பக்தர்கள் சாட்சி...படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
July 27, 2016
Rating:

No comments:
Post a Comment