கொத்தணி குண்டு குறித்து விசாரணை தேவை! சபையில் தமிழ் கூட்டமைப்பு வலியுறுத்து!
யுத்தத்தில் கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று சபையில் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் அரசு யுத்த காலத்தில் வடக்கின் மீது கொத்தணி குண்டுகளை வீசியது என்பதை காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவே உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் கூட்டமைப்பு தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் நேற்றுசெவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஹோமியோபதி சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு சபையில் தெரிவித்தார்.சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடக்கில் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால் மக்கள் தமது முறைப்பாடுகளில் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதாக கூறியுள்ளனர்.
கொத்தணிக் குண்டுகளுக்கு அப்போது தடையிருக்கவில்லை. எனவே அவ்வாறு கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டிருந்தாலும் அது சட்டவிரோதமானதல்லவென காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
அவரின் கருத்து மூலம் வடக்கில் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கில் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் கோரியுள்ளார்.
அதுபோன்று நாட்டு மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள அரசாங்கமும் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றார்.
கொத்தணி குண்டு குறித்து விசாரணை தேவை! சபையில் தமிழ் கூட்டமைப்பு வலியுறுத்து!
Reviewed by Author
on
July 06, 2016
Rating:

No comments:
Post a Comment