அண்மைய செய்திகள்

recent
-

2050ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா?


2050ஆம் ஆண்டில் உலகத்தின் மக்கள் தொகை 1000 கோடியை தொடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை பணியகம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை தற்போது 740 கோடியாக உள்ளது.

இந்த தொகையானது 2050ஆம் ஆண்டில் இது 1000 கோடியை எட்டும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 2050 ஆம் ஆண்டின்போது, ஆபிரிக்க நாடுகளின் மக்கள்தொகை 250 கோடியாகவும், அமெரிக்காவின் மக்கள் தொகை 120 கோடியாகவும் இருக்கும் எனவும் இந்த பணியகம் கூறியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 72 கோடியாகவும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் பங்களிப்பு 6.6 கோடியாகும் இருக்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, மக்கள் தொகை வளர்ச்சியில் அதிகபட்சமாக இந்தியா சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்களிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

இதன் வளர்ச்சி 530 கோடியாக இருக்கும். மேலும் 2050ஆம் ஆண்டில் இந்தியா உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2050ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? Reviewed by Author on August 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.