நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் மாயம்!
சுவிட்சர்லாந்து நாட்டின் போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஆல்பைன் மலைப்பகுதியில் திடீரென்று மாயமாகியுள்ளதால் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சுவிட்சர்லாந்தில் ராணுவத்திற்கு சொந்தமான ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய F/A-18C ரக விமானம் நேற்று காலை 7 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, சுச்டென் பகுதியில் ஆல்பைன் மலைப்பகுதியில் திடீரென்று காணாமல் போனது.
இதை தொடர்ந்து, அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அந்நாட்டின் விமானபடை தளபதி கூறியதாவது, மலைப்பகுதியில் மோசமான வானிலை நிலவி வருவதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அந்த விமானத்தில் சென்ற விமானி உயிருடன் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து தேடி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் மாயம்!
Reviewed by Author
on
August 30, 2016
Rating:

No comments:
Post a Comment