வடமாகாணத்தின் வல்லவனாய் வெற்றி வாகை சூடிய மன்னார் உதைபந்தாட்ட அணி…படங்கள் இணைப்பு
வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால் வடமாகாணத்தில் உள்ள 05 மாவட்டங்களையும் அதாவது யாழ்ப்பாணம்-கிளிநொச்சி-முல்லைத்தீவு-வவுனியா-மன்னார் மாவட்டங்களுக்கு இடையிலான உதைபந்தாட்டப்போட்டியில் மீண்டும் ஒருமுறை தனது திறமையினை பறைசாற்றி வடமாகாணத்தின் தனியொருவனாக வடக்கின் வல்லவனாக வெற்றி வாகை சூடியுள்ளது எமது மன்னார் மாவட்டம்….
மன்னார் மாவட்டத்தில் உள்ள கழகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வீரர்களை உள்ளடக்கி அணியினரே கடந்த 3 நாட்களாக தமது பலத்தினை வெளிப்படுத்தி கிளிநொச்சி மாவட்டத்தினை 2-0 வீழ்த்தி நேற்றைய தினமான 31-07-2016 அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மைதானத்தில் வைத்து இறுதிப்போட்டியில் யாழ்மாவட்டஅணியுடன் மோதி 1-0 பூச்சியம் என்ற கோல்கணக்கில் வெற்றீட்டியுள்ளனர்.
இவ்வெற்றிக்கோலை மன்னார் கில்லறிக்கழகத்தினைச் சேர்ந்த வீரர் ரஞ்சா அவர்களால் அடிக்கப்பட்டது. பள்ளிமுனையைச்சேர்ந்த எடிசன் பிகிறாடோ அவர்களின் தலைமையில் சென்ற அணியில் மன்னார் மாவட்டத்தின் புகழ் பூத்த சிரேஷ்ர வீரர் J-டிக்கோணி அவர்களும் கலந்து கொண்டு தனது திறமையினை வெளிப்படுத்தினார்.
சிறப்பம்சமாக மாகாணங்களுக்கிடையிலான தேசிய உதைபந்தாட்டப்போட்டியில் விளையாடுவதற்கு வடமாகாணத்தில் இருந்து மன்னார் மாவட்ட அணியே தெரிவு செய்யப்பட்டுள்ளது. பெருமையும் மகிழ்ச்சியுமாகும். தேசியப்போட்டியிலும் எமது மன்னார் மாவட்ட அணியே வெற்றி பெற வீரர்களை வாழ்த்துவதோடு பாராட்டி மகிழ்கிறது. மன்னார் வாழ் மக்களுடன் நியூ மன்னார் இணையக்குழுமத்தினரும்.
வெற்றி பெற வாழ்த்தி நிற்கின்றோம்….
தகவல்-மன்னார் பிரதேச விளையாட்டு அலுவலர்-J-Jerom
தொகுப்பு-வை-கஜேந்திரன்-
வடமாகாணத்தின் வல்லவனாய் வெற்றி வாகை சூடிய மன்னார் உதைபந்தாட்ட அணி…படங்கள் இணைப்பு
 
        Reviewed by Author
        on 
        
August 01, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
August 01, 2016
 
        Rating: 













No comments:
Post a Comment