வவுனியாவில் தனியார் வைத்தியசாலைக் கழிவுகள் தரைகீழ் நீருடன் கலப்பதாக மக்கள் விசனம்
வவுனியா, கற்குழி பகுதியிலுள்ள விடுதிகளுடன் கூடிய தனியார் வைத்தியசாலைக் கழிவுகள் தரைக்கீழ் நீருடன் கலப்பதால் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா, கற்குழி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான விடுதிகளுடன் கூடிய தனியார் வைத்தியசாலை ஒன்று நீண்டகாலமாக இயங்கி வருகின்றது. இங்கு முறையான கழிவகற்றல் முறை பின்பற்றப்படவில்லை. இதன் திண்ம, திரவக் கழிவுகள் தரைக்கீழ் நீருடன் கலப்பதால் அப்பகுதி நீர் மாசு அடைகின்றது. குறிப்பாக கற்ழிகு பகுதி நீர் தட்டுப்பாடு உள்ள ஒரு பகுதியாகும். இந்த கழிவுகள் தரைக்கீழ் நீரோட்டங்களுடன் கலப்பதால் நீர் கிடைக்கின்ற குழாய் கிணறுகள், கிணறுகள் மூலம் பெறப்படும் நீர் கூட மாசுபடுகின்றது. இது தொடர்பில் மாவட்ட சுகாதார சேவைத் திணைக்கள அதிகார்கள், வவுனியா நகரசபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா நகரசபைச் செயலாளர் த.தர்மேந்திரா அவர்களிடம் கேட்ட போது, குறித்த தனியார் வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ள மாடிக்கட்டிடத்திற்கான அனுமதி பெறப்படவில்லை. அந்த வைத்தியசாலை கூட தற்போது முறையான எந்த அனுமதியும் பெறப்படாது இயங்குகின்றது. இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
வவுனியாவில் தனியார் வைத்தியசாலைக் கழிவுகள் தரைகீழ் நீருடன் கலப்பதாக மக்கள் விசனம்
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
August 14, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
August 14, 2016
 
        Rating: 


No comments:
Post a Comment