அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் புதிதாக காணிகளை அபகரிக்க இராணுவம் திட்டம்?


தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக்கூறி வடக்கு கிழக்கில் போராட்டங்கள் அன்றாடம் எழுந்த வண்ணமே உள்ளன.

அந்த மக்களிடம் இலங்கை அரசும் தமிழ் அரசியல் தலைவர்களும் காணிகள் விடுவிக்கப்படும் என்ற வாக்குறுதிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றனர்.

இங்கு நல்லாட்சி அரசு திட்ட மிட்டு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகின்றதா? இதற்கு தமிழ் அரசியல் தலைவர்களும் உடந்தையா? என தற்போது சந்தேகம் எழுந்துள்ளதாக அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததும் வடக்கு மக்களின் மீள் குடியேற்றம் 6 மாதங்களுக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் வடக்கு மக்கள் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டங்கள் அரசியல் தலைவர்களின் தலையீடு மற்றும் வாக்குறுதிகளினால் இடைநிறுத்தப்பட்டமை சுட்டிக்காட்டப்படத்தக்க விடயம்.

எனினும் தற்போது இராணுவத்தின் தேவைக்காக மறைமுகமாக காணிகளை தொடர்ந்தும் அபகரித்துக் கொண்டே வருகின்றது எனவும் கூறப்படுகின்றது.

அதே சமயம் தேசிய பாதுகாப்பு காரணமாக இராணுவ வசமுள்ள காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாது, என இராணுவ தரப்பு பகிரங்கமாக அறிவித்து விட்ட போதும் இது வரையில் அரசு தரப்பில் எந்தவொரு பதிலும் கொடுக்கப்படவில்லை.

இதே வேளை, “பலாலி போன்ற சில பகுதிகளை படையினர் சுவீகரிக்கவுள்ளனர். அதற்காக அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்படவுள்ளது”. எனவும் இராணுவம் அண்மையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மெம்மேலும் காணிகளை இராணுவம் அபரிக்கும் என்பதனையும் அவர் வெளிப்படையாக கூறிவிட்டார். என்றே தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அரசியல் தலைவர்கள் அமைதியையே பேணிவருகின்றது. இங்கு அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகளை மறந்து விட்டார்களா? அல்லது தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்களா? என்ற சந்தேகம் நிலவுகின்றது.

எவ்வாறாயினும் இலங்கை இராணுவம் தற்போது வெளியிட்டுள்ள கருத்தின் அடிப்படை என்ன? தமிழ் மக்களின் அகதி வாழ்க்கை எப்போதுமே அகதி வாழ்க்கை தானா? என்ற பாரிய சந்தேகத்திற்கு அரசு தலைவர்கள் பதில் கூறவேண்டியது அவசியமாகின்றது.

வடக்கில் புதிதாக காணிகளை அபகரிக்க இராணுவம் திட்டம்? Reviewed by Author on August 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.