வர்த்தகர் கொலை வழக்கு! விசாரணைகளை திசை திருப்பவே கப்பம் கோரப்பட்டது, பொலிஸார் தீவிர விசாரணை
விசாரணைகளைத் திசை திருப்பும் நோக்கிலேயே பம்பலப்பிட்டி வர்த்தகரைக் கடத்திச்சென்று கப்பம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டிய பகுதியில் வசிக்கும் வர்த்தகரான மொஹமட் சுலைமான் கடந்த 21ஆம் திகதி கடத்தப்பட்ட நிலையில் அண்மையில் மாவனெல்ல பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் ஐந்து பேருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் நேற்று தடை விதித்ததுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் உறவினர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை நேற்று நிறைவடைந்துள்ள நிலையில், சுலைமான் கடத்தப்பட்டு 4 மணித்தியாலங்களுக்குள் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வர்த்தகர் படுகொலை தொடர்பில் ஐந்து நபர்களிடம் பொலிஸார் விசாரணை!
மர்ம நபர்களால் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டிய கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் ஐந்து பேர் பொலிஸாரினால் இன்று விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி கொத்தலாவல அவனியூவில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான முஹம்மது சுலைமான் சகீப் என்பவர் அண்மையில் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டிருந்த நிலையில், அவரது சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் மாவனல்லை பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வர்த்தகர் சகீப்பின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ஐந்து பேரை இனம் கண்டிருந்த பொலிஸார், அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எதிரான தடை உத்தரவொன்றை நீதிமன்றம் ஊடாகப் பெற்றுக் கொண்டிருந்தனர்.
அத்துடன் குறித்த சந்தேக நபர்கள் ஐந்து பேரும் இன்றைய தினம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்கள் தவிர படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர் சுலைமான் சகீப்புடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள், அவரிடம் கடன் பெற்றுக் கொண்டிருந்தவர்கள் மற்றும் தகராறுகளில் ஈடுபட்டிருந்தவர்கள் என்று மேலும் பலரும் எதிர்வரும் நாட்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இப்படுகொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 23 பேர் பொலிசாரினால் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வர்த்தகர் கொலை வழக்கு! விசாரணைகளை திசை திருப்பவே கப்பம் கோரப்பட்டது, பொலிஸார் தீவிர விசாரணை
Reviewed by NEWMANNAR
on
August 27, 2016
Rating:

No comments:
Post a Comment