முன்னாள் போராளிகள் மர்ம மரணம்! சர்வதேச வைத்தியர்களின் பரிசோதனை தேவை!
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் நோய் வாய்ப்படுவதாகவும், மர்மமான முறையில் மரணமடைவதாகவும் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
இரசாயன ஊசி ஏற்றப்பட்டு பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் முன்னாள் போராளிகளின் உடல் நிலை சம்பந்தமாக சர்வதேச வைத்தியர்கள் நியமிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென வடமாகாண சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடமாகாண சபையின் 58வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.
அமர்வின் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் குறித்த பிரேரணையினை சமர்ப்பித்தனர்.
பிரேரணையின் மீது உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

எனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி இதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டுமென்று கூறிய உறுப்பினர்கள், அண்மைக் காலங்களில் நடைபெற்ற நல்லிணக்க செயலணிகளில் முன்னாள் போராளிகள் இது குறித்து சாட்சியமளித்ததையும் அவர் சுட்டிக் காட்டினர்.
எனவே, முன்னாள் போராளிகள் வேண்டுமென்றே தங்களுக்கு நச்சு ஊசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பான உண்மைத் தன்மையை அறிய வேண்டிய கடப்பாடு மாகாண சபை உறுப்பினர்களுக்கு எழுந்துள்ளதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அந்த வகையில், மர்மமான முறையில் இரசாயன ஊசி ஏற்றப்பட்டமை , உணவில் மருந்து கலக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் குறித்து மருத்துவ பரிசோதனை செய்வதற்கான பிரேரணையை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர்.
தற்போது வாழ்ந்து வரும் போராளிகள் பற்றிய தகவல்களை பெற்றுத் தருமாறு உறுப்பினர்கள் இதன்போது கோரினர்.
பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி என்னென்ன சிகிச்சை பெற வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
வடமாகாண சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கம் பேசுகையில்: குறித்த குற்றச்சாட்டுகளின் பிரகாரம் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதனடிப்படையில் விசேட வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதுவரை 107 போராளிகள் இறந்ததாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. நடைபெற்ற ஆணைக்குழுவிலும் இவ்வாறு சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் மரணமான 107 பேர் குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டியுள்ளது.
மரண விசாரணை அறிக்கைகளை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.
சந்தேகத்திற்கு இடமாக மரணமான முன்னாள் போராளிகள் தொடர்பான தகவல்களைத் தர வேண்டும்.
விடுதலை செய்யப்பட்ட 15,000 முன்னாள் போராளிகளை அடிப்படை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
இதற்காக பொது மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு வருவதுடன் புற்றுநோயியல் நிபுணர்களிடமும் ஆலோசனைகள் பெற வேண்டியுள்ளது.
மருத்துவ பரிசோதனைகளை வட மாகாணத்தில் செய்ய முடியாது.எனவே, இதற்கு பன்னாட்டு விசாரணை அல்லது வெளிநாட்டின் உதவிகள் தேவை.
அத்துடன் முன்னாள் போராளிகளுக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் கூறினார்.
அந்த வகையில், இரசாயன ஊசி மற்றும் மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் மருத்துவ பரிசோதனைகளை செய்வதற்கு சர்வதேச வைத்தியர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்பதுடன், குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் சம்மதிக்க வேண்டுமென்றும் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.
பிரேரணைஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Reviewed by NEWMANNAR
on
August 10, 2016
Rating:

No comments:
Post a Comment