பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்
கிளிநொச்சி நகரக்கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பரவிப்பாஞ்சான் கிராம மக்கள் தங்களின் சொந்த வீடுகளில் இருக்க ஆனுமதிக்க கோரி நீண்ட காலமாகப் போராடி வருகிறார்கள்.
52 குடும்பங்களைச் சேர்ந்த நீண்ட கால காணி உறுதிப்பத்திரங்களைக் கொண்டிருக்கின்ற இம்மக்கள் சொந்தக்காணிகளில் குடியேறுவதற்காக சொல்லொணாத்துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
அவர்கள் போராடுகின்ற போதெல்லாம் இராணுவ அதிகாரிகளும், அரச அதிகாரிகளும் இந்த வாரம், அடுத்த வாரம் என சாட்டுப்போக்குகளைச் சொல்லி மக்களை நீண்ட காலமாக ஏமாற்றி வருகிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களும் இப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு 'இது மக்களுடைய காணி இவற்றை அவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று அரச உயர்பீடம் வரையும் வலியுறுத்தியிருந்தார்.
இருப்பினும் இராணுவம் குறித்த குடியிருப்பை விட்டு நீங்குவதற்கு மறுத்து வருகிறது.
இதனால் பொறுமை இழந்த மக்களின் போராட்டம் இன்று காலை இராணுவ முகாமின் வாயிலில் மீண்டும் ஆரம்பித்தனர்.
இது தொடர்பில் அங்கு கருத்து தெரிவித்த குடியிருப்பாளர்கள்,
தங்களுடைய வீடுகளுக்கு தாங்கள் செல்லப் போவதாகவும், இராணுவமோ, பொலிசாரோ தங்களைக் கைது செய்தால் நீதிமன்றத்திடமும் நீதி கோரப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
August 14, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
August 14, 2016
 
        Rating: 


No comments:
Post a Comment