நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் தமிழ் மக்கள் பேரவை....
அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் மக்கள் பேரவை, வெகுஜன எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக பேரவையின் உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த எதிர்ப்பு ஆர்பாட்டம் அடுத்த மாதம் வடக்கில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட உறுதிமொழிகளை அரசாங்கம் செய்ய தவறியுள்ளமையினாலேயே இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஜெனிவாவில் செப்டம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வின் போது அரசாங்கத்திற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே ஆர்ப்பாட்டம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும், இராணுவத்தினரிடம் உள்ள நிலங்களை மீளப்பெறுதல் தொடர்பிலும் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்பாட்டத்தை செப்டம்பர் 14ம் திகதி நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் ஆனால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
ஐ.நா பொதுச் செயலாளர் பாங் கீ மூனின் இலங்கை வருகைக்கும் இந்த ஆர்பாட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் தமிழ் மக்கள் பேரவை....
Reviewed by Author
on
August 28, 2016
Rating:

No comments:
Post a Comment