ஒடுக்கப்படுகின்ற இனத்தைக் காப்பது யார்? பான் கீ மூனிடம் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கேள்வி.
யுத்தம் முடிவுற்று ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இலங்கை அரசாங்கம் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொள்கிறது.நிலப்பறிப்பு குடிப்பரம்பல் மாற்றம் மொழிச்சிதைப்பு பண்பாட்டு சீரழிப்பு பொருளாதார அழிப்பு போன்றவை பாதுகாப்பு தரப்பு உதவியுடன் வளர்ச்சி பெற்று வருகின்றது இது நிறுத்தப்படா விட்டால் மிகப்பெரிய ஆபத்து தமிழ் மக்களிற்கு ஏற்படும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
-இவ்விடையம் தொடர்பாக அவர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
இரண்டாவது முறையாக இலங்கை வரும் தாங்கள் சுதந்திர வாழ்வுரிமைக்காகப் போராடும் இனத்தை அடக்கி ஒடிக்கி முடிவில் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு இன அழிப்புச் செய்த போதும் தாங்கள் எடுத்த வலுவான முன்னகர்வு என்ன?
2009ல் விமானத்தில் சென்று சுற்றிப்பார்த்து விட்டு கூட்டறிக்கை விட்டீர்கள் வழமை போல் இலங்கை அரசு கண்டு கொள்ள வில்லை நீங்களும் அதை செயற்படுத்த அக்கறை செலுத்தவில்லை.
சமாதானம் சமத்துவம் நீதி நியாயம் எனும் கோட்பாட்டோடு தொடங்கிய ஐக்கிய நாடுகள் சபை ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலாக ஒலிக்கத்தவறிவிட்டது என்பதை உங்களின் பேசவல்ல அதிகாரியே இலங்கை விடயத்தில் ஐ.நா தோற்றுவிட்டது என ஒரு முறை கூறியிருந்தார் என்பதை நினைவூட்டுகின்றோம்.
பாதிக்ப்பட்டவர்களிற்கு பாதுகாப்பு அரனாக இருக்க வேண்டிய ஐ.நா பார்வையாளராக வெறும் கண்டண அறிக்கை விடுவதும் காலக்கெடு வழங்கியதுமே இந்த ஏழு ஆண்டுகளின் கண்ட மிச்சம் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட 146,679 நபர்களின் நிலையியல் என்ன வென்று பொறுப்புக் கூறும் பொறிமுறையை சாத்தியப்படுத்தினீர்களா?
ஆட்சி மாற்றத்தின் பின்னர் நலிவுற்றுப் போய் விட்ட பிரேரணையாகவே தற்போது மாறிவிட்டது.
எதிர் காலத்தில் மனித உரிமைகள் விவகாரம் காணாமல் போய்விடக்கூடிய நிலமை ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகின்றோம்.
உலகமும் நீதியின் பாலுள்ள நியதியை மாற்றி விட்டதா? எனும் ஆதங்கம் பாதிக்கப்பட்ட எம் மக்களிற்கு எழுகிறது இலங்கை அரசாங்கம் நன்கு திட்டமிட்ட முறையில் உணவு, மருந்து அனுப்பாமாலும் பன்னாட்டு நிறுவனங்களையும் யுத்த பிரதேசத்தில் இருந்து அகற்றிவிட்டு பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் மருத்துவமனைகள் மீதும் சிறார்கள், பெண்கள், என்றும் சரணடைந்தவர்களையும் காயப்பட்டவர்களையும் விமானத்தாலும் எறிகனையாலும் கொத்துக் குண்டுகள் வீசியும் பொஸ் பரஸ்குண்டுகள் மூலமும் இன அழிப்பு செய்யப்பட்ட 1 46,679 பேரின் நிலை இது வரை என்ன வென்று தெரியவில்லை இது உங்களிற்கு இன அழிப்பாக தெரியவில்லையா?
தமிழினத்தை நீங்களும் மனிதர்களாக கருதவில்லையா? ஒரு தேசிய இனம் சுதந்திர வாழ்வுரிமைக்காக போராடுவது உலக சனநாயக ஒழுங்கில் தவறா? எம்மை விட குறைந்த நிலப்பரப்பும் மக்கள் தொகையும் கொண்ட கிழக்குத்தீமோர், கொசோவா, தென்சூடான் போன்ற நாடுகள் தனிநாடாக்கியதும் அதை ஐ.நாவும்; ஆதரித்ததே!!! நாம் ஒன்றைத்தேச ஒழுங்கில்; போராடாமைதான் தவறாகிவிட்டதா?
யுத்தம் முடிவுற்று ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இலங்கை அரசாங்கம் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொள்கிறது. நிலப்பறிப்பு குடிப்பரம்பல் மாற்றம் மொழிச்சிதைப்பு பண்பாட்டு சீரழிப்பு பொருளாதார அழிப்பு போன்றவை பாதுகாப்பு தரப்பு உதவியுடன் வளர்ச்சி பெற்று வருகின்றது இது நிறுத்தப்படாவிட்டால் மிகப்பெரிய ஆபத்து தமிழ் மக்களிற்கு ஏற்படும்.
எனவே தாங்கள் பதவிக்காலத்தின் நிறைவில் வருகிறீர்கள் பயனுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வலுச் சேருங்கள் வெறுமனே வெறும் சம்பிரதாய பூர்மமான பயணமாக மாற்றிவிடாதீர்கள். அதுதான் உங்கள் வாடிக்கை என்னும் விமர்சனமும் உண்டு!
ஆகவே இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் தமிழ்மக்களிற்கு நம்பகத்தன்மை ஏற்படக்கூடிய வகையில் சர்வதேச சுயாதீனமான விசாரணையே தமிழ்மக்களிற்கு திருப்தியை ஏற்படுத்தும் மாறாக உள்ளக பொறிமுறை என்பது குற்றவாளியே குற்றவாளியை விசாரிக்கும் கங்காரு நீதிமன்றம் போல் ஆகிவிடும். இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள் அல்லவா?
காணாமல் போனவர்களினதும், சிறைக்கைதிகளினதும்; மீள்குடியமர்விலும் பாதுகாப்புத்தரப்பால் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிப்பதிலும் கூட நல்லெண்ணம் காட்டாத நல்லாட்சி அரசு என்னும் பெயரை தாங்களே தங்களுக்கு வைத்து உலகத்தையே ஏமாத்துகிறது இலங்கை அரசாங்கம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் காட்சி மாற்றம் நிகழவில்லை இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களிற்கு எந்த விதமான ஆக்கபூர்வமான தீர்வையும் ஒருபோதும் வழங்காது என்பது கடந்தகால அனுபவத்தின் நம்பிக்கை. மாறாக எம்மை அமைதியாக அழிக்கிறது.
தமிழ்தலைமைகள் மீண்டும் ஒரு தடவை ஏமாற்றப்படுவார்கள். எனவே தமிழ் மக்களின் இறுதி நம்பிக்கை ஐக்கிய நாடுகள் சபை தான்.
ஆகவே தார்மீக உரிமையுடன் நீங்களும் எம்மை காப்பாற்றா விட்டால் கடவுளாலும் தமிழ் இனத்தை காப்பாற்ற முடியாது என்றே என்னுகின்றோம்.
எனவே நீதியின்பால் நியதியை தீர்த்துப்போக வைக்க மாட்டிர்கள் என நிறைவாக நம்பகின்றோம்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒடுக்கப்படுகின்ற இனத்தைக் காப்பது யார்? பான் கீ மூனிடம் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கேள்வி.
Reviewed by Author
on
August 30, 2016
Rating:

No comments:
Post a Comment