உயிராபத்தை தடுக்கும் ஆணுறைகள் விரைவில்....
பாலியல் சக்தியை அதிகரிக்கும் புதிய ஆணுறை மிக விரைவில் சந்தைக்கு வரவிருப்பதாக இலங்கையின் பாலியல் சார்ந்த நோய்கள், எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் சிரேஷ்ட பதிவாளர் மருத்துவர் பிரகீத் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இது சம்பந்தமாக வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் ஆய்வுகளை நடத்தியுள்ளதுடன் ஆய்வுகள் வெற்றியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆணுறையை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் சுகாதார கல்வி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மருத்துவர் பிரேமதாச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பாலியல் உணர்வுகளை தூண்டும் சில மருந்துகள் மருத்துவர்களின் ஆலோசனைகள் இன்றி வழங்கப்படுதனால், உயிராபத்தும் ஏற்படுகிறது.
இதனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மருந்துடன் கூடிய ஆணுறையை பயன்படுத்துவதன் மூலம் உயிராபத்துக்களை தடுக்க முடியும் எனவும் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் இலங்கையில் ஆணுறைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதால், பாலியல் சார்ந்த மற்றும் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையை குறைக்க முடிந்துள்ளதாகவும் மருத்துவர் பிரேமதாச மேலும் கூறியுள்ளார்.
உயிராபத்தை தடுக்கும் ஆணுறைகள் விரைவில்....
Reviewed by Author
on
September 29, 2016
Rating:

No comments:
Post a Comment