அண்மைய செய்திகள்

recent
-

26 வருடங்களின் பின்னர் கிளி. கொம்படி அம்மன் ஆலயத்தில் 108 பாற்குட பவனி..

கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர் இன்று காலை நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை கடற்கரையோரத்தில் அமைந்திருக்கின்ற கொம்படி அம்பாள் ஆலயத்தின் மேற்படி வருடாந்த உற்சவம் கடநத 26 வருடங்களுக்குப்பின்னர் தற்போது நடைபெற்று வருகின்றது.

கண்டாவளை ஆவரஞ்சாட்டி குஞ்சுப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து இன்று காலை 7.00 மணிக்கு108 பெண்கள் மஞ்சள் ஆடையணிந்து பாற்செம்புகள் சுமார் நான்கு கிலோமீற்றர் பவனியாக எடுத்து வரப்பட்டு 1008 இளநீர் 1008 சங்குகள் மற்றும் கொண்டுவரப்பட்ட 108 பாற்செம்புகள் கொண்டு கொம்படி அம்பாளுக்கு அபிசேகம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆலயம் இந்தப்பிரதேசத்தின் பூர்வீக ஆலயங்களில் ஒன்றாக காணப்படுவதுடன் இவ்வாலயம் கண்ணகி மதுரையை எரித்ததாக கூறப்படுகின்ற புராண காலத்தில் இலங்கையில் கடற்கரை யோரம் அமைக்கப்பட்ட பத்து கண்ணகி ஆலயங்களில் இது எட்டாவதாக அமைக்கப்பட்ட ஆலயம் எனக் கூறப்படுகின்றது.


கடந்த 1990ஆம் ஆண்டிற்குப்பின்னர் ஏற்பட்ட யுத்தத்தினால் ஆலயம் சேதமடைந்துள்ளதுடன் மக்கள் செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் குறித்த ஆலயம் புனரமைக்கப்பட்டு 26 வருடங்களின் பின்னர் நடைபெற்று வருகின்ற இத்திருவிழா நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



26 வருடங்களின் பின்னர் கிளி. கொம்படி அம்மன் ஆலயத்தில் 108 பாற்குட பவனி.. Reviewed by NEWMANNAR on September 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.