அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை ராட்சத புள்ளி சுறா-Photos

பாம்பன் அருகே குந்துகால் கடற்கரை கிராமத்தில் இறந்த நிலையில் ராட்சத புள்ளி சுறா ஒன்று இன்று புதன் கிழமை காலை கரை ஒதுங்கியது.

இதனை கண்ட கிராம மக்கள் வனத்துறையினார்க்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய புள்ளி சுறாவை உடல்கூறு சோதனை செய்து மணலில் புதைத்தனர்.

உலகிலேயே மிக அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் பகுதி மன்னார் வளைகுடா கடற்பகுதியாகும்.

இந்நிலையில் குந்துகால் கடற்கரையில் சுமார் 1500 கிலோ எடையும், 17 அடி நீளமும் கொண்ட அரியவகை புள்ளிசுறா ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இறந்த புள்ளிசுறா நோய் வாய்ப்பட்டு அல்லது பெரிய அளவிளான சரக்கு கப்பலின் எஞ்சினில் அடிபட்டு இந்த புள்ளிசுறா இறந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஆழ்கடல் பகுதியில் வசிக்கக்கூடியது எனவும் சங்கு வகைகள் மற்றும் அதிக முள்பகுதிகொன்ட இன மீன்களை உணவாக கொன்டு வாழும் தண்மையுடையது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் புள்ளிசுறா உடலை கைப்பற்றிய வனத்துறையினர் உடல்கூறு பரிசோதனைக்கு பின்னர் அதனை அருகில் உள்ள கடற்கரை மணலில் புதைத்தனர்.

அரியவகை ராட்சத புள்ளிசுறா இறந்த நிலையில் கரை ஒதுங்கியது அந்தப்பகுதி பொதுமக்கள சிறுவர்கள மற்றும் மீனவர்கள அதிசயத்தடன் பார்த்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.









மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை ராட்சத புள்ளி சுறா-Photos Reviewed by NEWMANNAR on September 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.