சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மின் கம்பியை கடித்து தற்கொலை
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார். புழல் சிறையில் மின் கம்பியை கடித்த ராம்குமார் மரணமடைந்தார். சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு ராம்குமார் உடல் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி வெட்டிக் கொல்லபட்டார்.
சுவாதி கொலையில் கைது செய்யப்படும்போது ராம்குமார் கழுத்தை அறுத்துக் கொண்டார். அவரை நெல்லை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் சென்னை கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்த ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மின் கம்பியை கடித்து தற்கொலை
Reviewed by NEWMANNAR
on
September 18, 2016
Rating:

No comments:
Post a Comment