தியாகதீபம் திலீபனின் நினைவு தினம் பொது இடங்களில் அனுஸ்டிக்கப்படுமா?
விடுதலைப் புலிகளின் உறுப்பினர் தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு வணக்க நிகழ்வை வடக்கில் சில அரசியற் கட்சிகள் தமது அலுவலகங்களில் அனுஸ்டித்துள்ளனர்.
அது மட்டும் இன்றி தொடர்ந்தும் திலீபனின் நினைவு தினத்தை அவ்வாறு செய்யவும் முனைகின்றனர்.
இந்த செயற்பாட்டினால் திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கு கட்சியின் அடிப்படையில் பொதுமக்கள் பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அனைத்து தமிழ்கட்சிகளும் ஒன்றிணைந்து திலீபனின் நினைவு தினத்தை பொது இடங்களில் உணர்வு பூர்வாமாக அனுஸ்டிக்க முன்வரவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தமிழ்மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர் லெப்டினன்ட் கேணல் திலீபன் (இராசய்யா பார்தீபன்) உண்ணாவிரதமிருந்து ஈகைச்சாவடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தியாகதீபம் திலீபனின் நினைவு தினம் பொது இடங்களில் அனுஸ்டிக்கப்படுமா?
Reviewed by Author
on
September 20, 2016
Rating:

No comments:
Post a Comment