அண்மைய செய்திகள்

recent
-

இறுதிச்சடங்கின் போது நடந்த விபரீதம்: 140 பேர் பலி......


சவுதி தலைமையிலான ராணுவத்தினர் ஏமனில் வான் வழி விமான தாக்குதல் நடத்தியதில் 140 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏமன் நாட்டில் உள்ள சனா நகரில் இறுதி சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென விமான படை தாக்குதல் அங்கு நடத்தபட்டது. இந்த தாக்குதலில் 140 பேர் கொல்லபட்டதாகவும். 525 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் சவுதி தலைமையிலான கூட்டு ராணுவத்தால் நடந்ததாக நம்பப்படுகிறது.

இது குறித்து ஐ.நா அதிகாரி ஒருவர் கூறுகையில், பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டனத்குரிய விடயமாகும். இது குறித்த விரிவான விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறித்தியுள்ளார்.

இறுதிச்சடங்கின் போது நடந்த விபரீதம்: 140 பேர் பலி...... Reviewed by Author on October 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.