14ஆண்டுகளின் பின்பு சாதனைபுரிந்த மன்-நொச்சிக்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் ஜெபனேசன் ரவி டிலோசன்
மன்-நொச்சிக்குளம் றோ.க.த.க பாடசாலையில் இருந்து கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் எடுத்து புலமைப்பரிசிலை பெற்றுக்கொண்டார்கள். அதன் பின்னர் சுமார் 14 வருடங்களின் பின்னர் இம்முறை 2016ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவன் ஜெபனேசன் ரவி டிலோசன் 150 புள்ளிகளைப்பெற்று சாதனை புரிந்துள்ளார்.
அத்தோடு புலமைப்பரீட்சையில் தோற்றிய சகல மாணவர்களும் 86புள்ளிக்கு மேல் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் 100வீதம் சித்தியடைந்துள்ளார்கள். இம்மாணவர்களின் சித்தியடைய அயராது உழைத்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் அதற்கும் மேலாக தற்போது தான் அதிபராக கடமைப்பொறுப்பேற்று 3வருடத்திற்குள் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளது பாராட்டுக்குரியதே…
எமது மன்னார் மாவட்டத்தில் உள்ள பல பெரிய பாடசாலைகள் தேசியபாடசாலைகள் சகலவசதிகள் இருந்தும் பெற்றுக்கொள்ளும் சித்தி வீதமானது எந்தவித வசதி வாய்ப்புகளுமற்ற கிராமப்புறத்தில் உள்ள மன்-நொச்சிக்குளம் றோ.க.த.க பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் எடுத்திருக்கும் 150 புள்ளியானது சாதனையின் உச்சமல்லவா உணர்ந்து கொள்ளுங்கள் உண்மையினை……
14 ஆண்டுகளின் பின்பு தனது பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை தேடித்தந்த மாணவன் ஜெபனேசன் ரவி டிலோசன் ஏனைய மாணவர்களையும் பாடசாலைச்சமூகத்தினையும் உளமார பாராட்டி வாழ்த்துகின்றோம். எமது நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக….
14ஆண்டுகளின் பின்பு சாதனைபுரிந்த மன்-நொச்சிக்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் ஜெபனேசன் ரவி டிலோசன்
Reviewed by Author
on
October 10, 2016
Rating:

No comments:
Post a Comment