அண்மைய செய்திகள்

recent
-

தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்: உடல் சிதைந்து பலியான 19 பேர்


ரஷ்யா நாட்டில் ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சைபீரியாவில் இருந்து நேற்று Mi-8 என்ற ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று 22 பேருடன் புறப்பட்டுள்ளது.

சில மணி நேரப்பயணத்திற்கு பின்னர் Yamal Peninsula என்ற பகுதியில் தரையிறங்க முயன்றபோது அந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

ஹெலிபேட் அமைந்துள்ள இடம் சரியாக தெரியாததால் ஹெலிகொப்டர் தாறுமாறாக சுழன்றுள்ளது.

பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகொப்டர் தரையில் வேகமாக மோதி நொறுங்கியுள்ளது. ஹெலிகொப்டரில் தீவிபத்து ஏற்படவில்லை.

எனினும், இவ்விபத்தில் சிக்கிய 3 வீரர்கள் உள்பட 19 பேர் உடல் சிதைந்து பலியாகியுள்ளனர்.

எஞ்சிய 16 பேர் எண்ணெய் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் என கூறப்படுகிறது.


Alexey Veremev (42) என்னும் பயணி ஒரு கால் ஹெலிகொப்டரில் மாட்டிய நிலையில், வலியால் துடித்து கொண்டே உதவி உதவி என கத்தியுள்ளார்.

சில மணி நேரம் கழித்து அங்கு வந்த மீட்புபணி குழுவினர் அங்குள்ள சடலங்களை மீட்டனர்.

காயத்துடன் அங்கு போராடி கொண்டிருந்த Alexey உட்பட மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவராத நிலையில், இரண்டு கருப்பு பெட்டிகளை கைப்பற்றியுள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்: உடல் சிதைந்து பலியான 19 பேர் Reviewed by Author on October 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.