யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் தமிழ் தினவிழா
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் தமிழ் தினவிழா இன்று செவ்வாய்க் கிழமை முற்பகல் 9.30 மணியளவில் கல்லூரி விசா லாட்சி மண்டபத்தில் நடைபெற்றது. செல்வி கீர்த்திகா சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தி னராக இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜன், கௌரவ விருந்தினர்களாக நல்லூர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எக்ஸ். அன்ரன், யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர் ந. தெய்வேந்திரராஜா , ஆசிரியர் பயிற்சி கலாசாலை விரிவுரையாளர் குமரேசன் பாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் 'தமிழ் அகரம்' என்னும் நூல் வெளியிடப்பட்டது. இந்நூலினை இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜன் வெளியிட்டு வைக்க முதல் பிரதியினை இலங்கை வங்கியின் சிரேஸ்ட முகாமையாளர் கு. சிவஞானசுந்தரம் பெற்றுக்கொண்டார். ஏனைய சிறப்பு பிரதிகளை விழாவில் கலந்து கொண்டவர்கள் பெற்றுக்கொண்டனர்.
இந்திய துணைத்தூதுவரால் கல்லூரிக்கு ஒரு தொகுதி இசைக்கருவிகள் வழங்கப்பட்டன. மேலும், தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற பாடசாலை மாணவர்களின் இரு நடனங்கள் மேடை ஏற்றப்பட்டன. ஆசிரியர் பயிற்சி கலாசாலை விரிவுரையாளர் குமரேசன் பாலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் தமிழ் தினவிழா
Reviewed by NEWMANNAR
on
October 18, 2016
Rating:

No comments:
Post a Comment