சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அடுத்த சாதனை.....
இந்தியா- நியூசிலாந்துக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றொரு சாதனை படைத்துள்ளார்.
27.2 ஓவர்களில் 81 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்த அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 20வது முறையாக 5 அல்லது அதற்கு மேலான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியை பொருத்தளவில் இந்த பட்டியலில் சுழல் பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார். அவர் 35முறை, ஒரு இன்னிங்சில், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்தபடியாக, மற்றொரு சுழல் வீரர், ஹர்பஜன்சிங் 25 முறையும், வேகப்பந்து ஜாம்பவான் கபில்தேவ் 23 முறையும், இச்சாதனையை படைத்துள்ளனர்.
எனவே இப்பட்டியலில் அஸ்வின் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், அஸ்வின் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 211 விக்கெட்டுகளை குவித்துள்ளார்.
இஷாந்த் ஷர்மாவின் 209 விக்கெட்டுகளை முந்தியுள்ளார் அஸ்வின். இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில், அஸ்வின் 8வது இடத்திலுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அடுத்த சாதனை.....
Reviewed by Author
on
October 11, 2016
Rating:

No comments:
Post a Comment