அண்மைய செய்திகள்

recent
-

மீனவர் பிரச்சனைக்கு தீர்வு? இலங்கையுடன் பேச்சு.....


மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், இந்திய - இலங்கை வெளியுறவு அமைச்சர்கள், இந்த வாரம் பேச்சு நடத்தவுள்ளனர்.

இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே, கடலில் மீன்பிடிப்பது தொடர்பான எல்லை பிரச்சினை , நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இது தொடர்பாக இரு தரப்பும் பலமுறை பேச்சு நடத்தியும் தீர்வு காணப்படாததால், தமிழக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, மீனவர்கள் கைது செய்யப்படுவது, தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், இந்திய - இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான பேச்சு, இந்த வாரம் நடக்க உள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு இடையேயான பேச்சு, வரும், 5ல் டில்லியில் நடக்க உள்ளது.

முன்னதாக, இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் இடையேயான கூட்டம் டில்லியில் நடக்க உள்ளது. இதற்காக, 10 பேர் அடங்கிய இலங்கை மீனவர் சங்கப் பிரதிநிதிகள், வரும், 2ல் அங்கு செல்லவுள்ளனர்.

மீனவர் பிரச்சனைக்கு தீர்வு? இலங்கையுடன் பேச்சு..... Reviewed by Author on October 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.