அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய கேள்வி பதில் - மன அழுத்த நோயாளியியை கண்டறிவது எவ்வாறு?

கேள்வி:−கெளரவ சட்டத்தரணி சுதன் sir அவர்களுக்கு முதல்கண் எனது பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.Sir நான் முருங்கனிலிருந்து வினோதினி.மன அழுத்த நோயாளியியை கண்டறிவது எவ்வாறு?

பதில்:−

அன்பான சாகோதரியே! "மனநோய்"தொடர்பான பல கேள்விகளுக்கு முன்பு பல தடைவைகள் பதிலளித்துள்ளேன்(அதனை எனது முகநூலில் சென்று பார்வையிடவும்)இருப்பினும் சுருக்கமாக கூறுகிறேன்"உள நோய் என்பதற்கு இதுதான் அறிகுறி என்று தெளிவாக கூற முடியாது.காரணம் சூழலுக்கும் தேவைக்குமேற்ப அது மாறு படும்.தான் எதிர் பார்த்த தேவை மற்றும் உணர்வுகள் அடையப் படாததன் உச்சமே இந்த உள நோய்க்கான காரணமாகும்.
இது"வெறுப்பு"என்ற அடிப்படியில் மூலாதாரமாக அமையும்.இதனால் மனிதனுடைய நடவடிக்கைகளில் சில மாற்றம் வெளிப்படும்.கவலை உணர்வுடன் உடம்பின் பலமிழந்த உணர்வுகள், தன்னம்பிக்கை இழந்து தனிமை எனும் உணர்வுடன் ஒதுங்கிக் கொள்லுதல், வழக்கமாக பொழுதுபோக்குகளில் நாட்டமின்மை போன்றவை மன அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிககாகும். அதுவே அதிகமாகி, அதிகாலையில் தூக்கமின்றி விழித்துக் கொள்ளுதல், வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு வாழக்கையை முடித்துக் கொள்ளலாமோ என்ற எண்ணம் அடிக்கடி மனதில் எழுதல், அதற்கான தற்கொலை முயற்சி போன்றவைகளில் ஏதோவொன்று காணப்பட்டால் தகுந்த அலோசகரையோ மனநல மருத்துவரையோ அணுகி ஆலோசனை வெறுவது முக்கியமாகும்..
ஒருவருடை மன அழுத்தத்தை மூளையின் செயல்பாடு குறைவினால் ஏற்படும் சைக்காட்டிக் (Psychotic) மன அழுத்தம் மற்றும் அவ்வப்போது வாழ்க்கையில் ஏற்படும் பாதகமான சூழலினால் ஏற்படும் நியூரொட்டிக் (Neurotic) மன அழுத்தம் என இருவகையாக பிரிக்கலாம்.இவற்றுள் நியூராட்டிக் வகையே மிகவும் பரவலாகக் காணப்படுவது. கடந்த காலத்தைக் குறித்த குற்ற உணர்வு, நிகழ்காலத்தைக் குறித்த உதவியற்ற நிலை, எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையின்மை இவையே இத்தகைய மன அழுத்தத்தின் முக்கிய அடிப்படைக் காரணிகள். எனவே அத்தகைய சூழ்நிலைக்குள் ஒருவனைத் திடீரென்றோ படிப்படியாகவோ தள்ளும் எந்தவொரு பாதகமான சூழ்நிலையும் மனிதனுக்கு மனஅழுத்தத்தைக் கொண்டுவருகிறது.
சரியான திட்டமிடுதல், அவசர மற்றும் அவசியப் பணிகளை முதலில் முடித்தல், வேலைப்பளுவில் அவ்வப்போது ஓய்வு எடுத்தல்,மனதை தளர்வாக வைத்திருத்தல்,தனிமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், தியானம், உடற்பயிற்சிகள், பொழுதுபோக்குக் காட்சிகள்,நிம்மதியான தூக்கம்,கணவன் மனைவிக்கிடையிலான திருப்தியான தாம்பத்தியம்,பொழுது போக்கு பயணங்கள் முதலானவை மன அழுத்தத்திற்கு மருந்துகளாக பலராலும் அவ்வப்போது பரிந்துரைக்கப்ப்படுகின்றன.இவைகளெல்லாம் சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் இவற்றில் செயல்வடிவில் உள்ள பிரச்சினைகள் அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே எளிதில் புரியும்
மனித அழுத்தமுள்ளவர்கள் முடிந்தவரை தீர்மானமெடுத்தல்,படித்தல்,அதிக கவனமான வேலை செய்தல்,அதீக கவலையால் ஏற்படும் அழுகையினை நிறுத்துதல்,மது,போதை பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றை பண்ணக் கூடாது.ஒருவர் தனது உளநோயினை தான் உணர்ந்தால் அல்லது பிறர் உணர்ந்து சிகிச்சை பெற்றால் ஒழியமன நோயினை குணபடுத்த முடியாது.பொதுவாக உள நோய் என்பது அனைவருக்குமுள்ள ஒரு நோயாகும்.ஆனால் அதன் வீரியத் தன்மையின் அளவை வைத்துதான் மனநோய் தீர்மானிக்கப்படுகிறது.உடல் நோய்க்கு சிகிச்சை பெறுவதை போல் மன நோய்க்கு சிகிச்சை"பெறுவோரின் எண்ணிக்கை மிக குறைவாகும்.அதனை கெளரவக் குறைத்தல் என்று நோக்காது,சிகிச்சை எடுக்கும் போதே மன நோய் குணமடையும்.
இன்றைய கேள்வி பதில் - மன அழுத்த நோயாளியியை கண்டறிவது எவ்வாறு? Reviewed by NEWMANNAR on October 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.