மன்னார் வட்டுப்பித்தான் மடு பகுதியில் பொலிஸ் நடமாடும் சேவை ஆரம்பித்து வைப்பு-Photos
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டுப்பித்தான் மடு கிராமத்தில் மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை காலை விசேட பொலிஸ் நடமாடும் சேவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாகவும்,வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களின் வழி நடதத்தலின் கீழ் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சிரந்த பீரிஸ் அவர்களின் தலைமையில் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை காலை புதுக்கமம் கிராம அலுவலகர் பிரிவுக்குற்பட்ட வட்டுப்பித்தான் மடு பொது மண்டபத்தில் குறித்த பொலிஸ் நடமாடும் சேவை வைபவ ரீதியாக ஆராம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு குறித்த நடமாடும் சேவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று ஓக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலம் குறித்த நடமாடும் சேவை இடம் பெறவுள்ளது.
இதன் போது அப்பிரதேச மக்கள் புதிய முறைப்பாடுகளை பதிவு செய்தல்,முறைப்பாடுகளை விசாரனை செய்தல் போன்ற சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும்,குறித்த நடமாடும் சேவையினூடாக சிரமதான நிகழ்வுகள்,சமய நிகழ்வுகள்,கல்வி சார் நிகழ்வுகள்,கலாச்சார நிகழ்வுகள்,சுகாதார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் என்பன குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த ஆரம்ப நாள் நடமாடும் சேவை நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சிரந்த பீரிஸ் மற்றும் விருந்தினராக மன்னார் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பிரசன்ன பரனமான,மற்றும் கிராம அலுவலகர்கள்,சிவில் பாதுகாப்பு குழு பிரதி நிதிகள்,மன்னார் பிரதேச செயலக அதிகாரிகள்,கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் வட்டுப்பித்தான் மடு பகுதியில் பொலிஸ் நடமாடும் சேவை ஆரம்பித்து வைப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
October 30, 2016
Rating:

No comments:
Post a Comment