மன்-அடம்பன்-றோ.க.த.க ஆரம்பப்பாடசாலை புலமைப்பரிசில் பரீட்சையில்
மன்னார் மடுவலையத்தில் மன்-அடம்பன்-றோ.க.த.க பாடசாலை(ஆரம்பப்) புலமைப்பரிசில் பரீட்சையில்
மடுவலையத்தில்.......
- மரியசீலன் கபிஷன் மாவட்ட நிலை-16 மடுவலைய நிலை-02
- அந்தோனிதாசன் கபினயா மாவட்ட நிலை-24 மடுவலைய நிலை-03 சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வானது 20-10-2016 அன்று பாடசாலையில் பாடசாலை அதிபர் திரு.S.மரியதாஸ் தலமையில் யதீஸ் புத்தகசாலை உரிமையாளர் திரு.S.R.யதீஸ் அவர்களின் நிதிப்பங்களிப்போடு மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் பொதியும் சித்தியடைந்த மாணவமாணவியரின் பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி.இந்திரராஜா ரேவதி அதிபர் திரு S.மரியதாஸ் அவர்களின் புகைப்படம் பொறித்த சாதனைச்சூரியன் எனும் நாமத்தோடு பாராட்டுச்சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஓவ்வொரு பாடசாலைமாணவமாணவியருக்கும் இவ்வாறான கௌரவிப்பு நிகழ்வுகளை செய்யவிருப்பதாகவும் தான் கடந்த சில வருடங்களாக இவ்வாறான கல்விச்செயற்பாட்டிற்கு ஊக்கமளித்தும் வருவதாகவும் கல்விக்கான தனது சேவை தொடரும் என்றார்.
கல்விக்காக சேவையாற்றும் இவர்களை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.
மன்-அடம்பன்-றோ.க.த.க ஆரம்பப்பாடசாலை புலமைப்பரிசில் பரீட்சையில்
Reviewed by Author
on
October 24, 2016
Rating:

No comments:
Post a Comment