டோனியின் ஹெலிகொப்டர் ஷாட்க்கு இவர்தான் காரணம்!
கிரிக்கெட் வரலாற்றில் டோனியின் “ஹெலிகொப்டர் ஷாட்” மிகவும் பிரபலம்.
கட்டாயம் தனது ஒவ்வொரு ஆட்டத்திலம் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த ஷாட் அமையும். அதற்கு வசதியாக பந்து கிடைத்தால் சொல்லவா வேண்டும்.
ஆனால், இந்த ஷாட் டோனியின் தனிபட்ட ஒன்றல்ல அவரது நெருங்கிய நண்பர் “சந்தோஷ் லால்தான்” டோனிக்கு ஹெலிகொப்டர் ஷாட்டை கற்றுக் கொடுத்தவர் துரதிருஷ்டவசமதாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்த “சந்தோஷ்லால்” இறந்து விட்டார்.தனது “அன்டோல்ட் ஸ்டோரி” புத்தகத்திலும் சந்தோஷ்லால் பற்றி டோனி குறிப்பிட்டுள்ளார்.
சந்தோஷ் லால் அதனை“தாப்பாட் ஷாட்” என கூறிப்பிடுவார் . அவருக்கு சமோசா வாங்கிக் கொடுத்து தான் அந்த ஷாட்டை அடிக்க நான் கற்றுக் கொண்டேன். என டோனி கூறியுள்ளார். இது “தோனி:அண்டோல்ட் ஸ்டோரி” படத்திலும் காட்சியாக வருகின்றது.
சந்தோஷ்லால் ஜார்ஹன்ட் மாநில ரஞ்சி அணியில் தோனியுடன் இடம்பெற்றிருந்தார். இந்திய அணிக்குள் காலடி எடுத்து வைத்த தோனி கேப்டனாக உயர்ந்த நிலையிலும் தனது பழைய நட்பை மறக்காமல் சந்தோஷ்லாலுடன் அடிக்கடி பைக்கில் சேர்ந்து போவதும் வழக்கம்.
கடந்த 2013ம் ஆண்டு கணைய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார் சந்தோஷ்லால்.
அந்நேரம் சுற்றுப்பயணத்தில் இருந்த டோனி “என்ன செலவானாலும் பரவாயில்லை”.உடனடியாக வைத்தியத்திற்காக அவரை ஹெலிகாப்டர் மூலமாக சரி டெல்லிக்கு அழைத்துவரும்படி கூறினார்.இருந்தும் மோசமான வானிலை காரணமாக தாமதமாகி விட்ட ஹெலிகொப்டரால் சந்தோஷ்லாலின் உயிர் காப்பாற்றமுடியாமல் போனது.சந்தோஷ்லாலுக்கு மனைவியும் 3 வயது மகளும் உண்டு.
நண்பர் மறைந்து விட்ட நிலையில், தற்போது அந்த குடும்பத்திற்கு டோனி உதவி வருகின்றார். தனது சுயசரிதைப் புத்தகத்தில் “ஹெலிகொப்டர் ஷாட்டை” கற்றுக் கொடுத்த தனது பால்ய நண்பரை குறிப்பிட்டு அவரை கவுரப்படுத்தியுள்ளார். தோனி. உண்மையிலேயே தோனியின் சுயசரிதை ஒர் 'அன்டோல்ட் ஸ்டோரி' தான்.
டோனியின் ஹெலிகொப்டர் ஷாட்க்கு இவர்தான் காரணம்!
Reviewed by Author
on
October 04, 2016
Rating:

No comments:
Post a Comment