முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதி....
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக நீதிமன்ற கட்டிடம் அமைப்பதற்கு நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக இருக்கும் மாணிக்கவாசகர் கணேசராஜா முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய போது அதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.
அத்துடன், கட்டிடம் அமைப்பதற்காக 20 ஏக்கர் பரப்பளவு காணியை அரச அதிபரிடமிருந்து பெற்று நீதிமன்ற வளாகத்திற்காக ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நடவடிக்கையுடன், மாங்குளத்தில் சுற்றலா நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னெடுத்திருந்தார.
அதற்கான அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்குரிய நடவடிக்கைகளையும் நீதியமைச்சு முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதி....
Reviewed by Author
on
October 20, 2016
Rating:

No comments:
Post a Comment