அமரர் ஜேம்ஸ் .சுதாஜினி இசைக்குரல் தேர்வு -2016
அமரர் ஜேம்ஸ் .சுதாஜினி அவர்களின் இறப்பின் முதலாவது வருட நிறைவை முன்னிட்டு (14-09-2016 ) ஜேம்ஸ் ,றீற்றம்மா ,சுதாஜினி உதவிகரத்தின் அனுசரைனையுடன் எதிர்வரும் 15-10-2016 தொடக்கம் 20-10-2016 ஆகிய திகதிகளில் ஜேம்ஸ்.சுதாஜினி இசைக்குரல் தேர்வு நடைபெறவுள்ளது .
இவ் இசைகுரல் தேர்வானது ,விடத்தல்தீவு ,மற்றும் ஜோசப்வாஸ் நகர் ஆகியவற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகும் .
இக் கிராமங்களை சேர்ந்த வெளிப்படசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களும் இதில் பங்குபெறலாம் .
இவ் இசைக்குரல் தேர்வுக்கு விடத்தல்தீவு மறை ஆசிரியர்களும் ,ஜோசப்வாஸ் நகர் மறை ஆசிரியர்களும் பொறுப்பாக இருப்பார்கள் .
ஆரம்ப போட்டிகள் விடத்தல்தீவிலும் ,ஜோசப்வாஸ் நகரிலும் நடைபெற்று இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் 04-11-2016 அன்றையதினம் ஜோசாப்வாஸ் நகரில் இடம்பெறும் .
போட்டிக்கான பிரிவுகள் -
1) கீழ்பிரிவு - தரம் 01 - 05 வரை .
2) இடைநிலைப் பிரிவு - தரம் 06 - 10 வரை .
3) மேற்ப்பிரிவு - தரம் 11 - 13 வரை .
தகவல் .
ஜோன்சன் .கியோமர் பயஸ்.
தலைவர்,
ஜேம்ஸ்றீற்றம்மா சுதாஜினி உதவிகரம் .
விடத்தல்தீவு .
அமரர் ஜேம்ஸ் .சுதாஜினி இசைக்குரல் தேர்வு -2016
Reviewed by NEWMANNAR
on
October 04, 2016
Rating:

No comments:
Post a Comment