கழிவுகள் அற்ற இலங்கை என்னும் தொனிப்பொருளில் மன்னாரில் முகாமைத்துவ வாரம் அனுஸ்ரிப்பு.(Photos)
தேசிய ரீதியில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் பொலித்தீன் பிளாஸ்ரிக் மற்றும் மின்சார இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரமாக கடந்த 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தேசிய நிகழ்வினை முன்னிட்டு மன்னார் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் நகரசபை பொது விளையாட்டு மைதானத்தில் விழிர்ப்புணர்வு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ் தேசப்பிரிய கலந்து சிறப்பித்தார்.
கேளரவ விருந்தினர்களாக,சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்,ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்டப் பொறுப்பதிகாரி உரையாற்றுகையில்,,
இவ் வேலைத்திட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தின் நகர மற்றும் பிரதேசசபைகளின் செயலாளர்கள் அனைவரும் 24-10-2016 ஆம் திகதி தொடக்கம் 30-10-2016 வரை தங்களின் பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக அறியத்தந்துள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் இவ் வேலைத்திட்டத்தினை இணைந்து மேற்கொள்வதற்கு UNOPS நிறுவனத்தினரும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
மேலும் தரம் பிரிக்கப்பட்ட பொலித்தீன்,பிளாஸ்டிக் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை பொதியிட்டு இந் நிகழ்வில் வைத்து மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம்; கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(30-10-2016)
கழிவுகள் அற்ற இலங்கை என்னும் தொனிப்பொருளில் மன்னாரில் முகாமைத்துவ வாரம் அனுஸ்ரிப்பு.(Photos)
Reviewed by NEWMANNAR
on
October 30, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 30, 2016
Rating:





No comments:
Post a Comment