அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவின் பிரபல பெண் வைத்தியர் உட்பட இருவர் பலி.....படங்கள் இணைப்பு


வவுனியா மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய சகோதரியின் மகள் ஒருவரும் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற, இவர்கள் பயணம் செய்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொன்டைனர் எனப்படும் கொள்கலன் பொருத்தப்பட்ட வாகனத்தின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாராகிய வவுனியா பொது வைத்தியசாலையின் டாக்டர் கௌரிதேவி நந்தகுமார் (49) என்பவரும், அவருடைய பெறாமகளாகிய சிவதுர்க்கா சத்தியநாதன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகோ வைத்தியசாலையில் பொலிஸாரினால் கையளிக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரினதும் சடலங்களை குருணாகல் வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி சிவநாதன் படுகாயமடைந்து மாகோ வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாகோ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





வவுனியாவின் பிரபல பெண் வைத்தியர் உட்பட இருவர் பலி.....படங்கள் இணைப்பு Reviewed by Author on October 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.