14 ஆம் திகதி வானில் நிகழும் அதிசயம் தெரியுமா?
வரவிருக்கின்ற 14 ஆம் திகதி வானில் தெரியும் சாதரண பவுர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் நிலவு தோன்றும் என நாசா தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையமான நாசா தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 14 ஆம் திகதி வானில் சூப்பர் மூன் தோன்ற உள்ளது. சூப்பர் மூன் என்றால் பூமிக்கு மிக அருகில் அதிக வெளிச்சத்தில் மிகப் பெரியதாக தோற்றமளிப்பது.
இந்த நிலவானது, பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீற்றர் தொலைவில் சுற்றி வருகிறது.
இந்நிலையில் சில சமயம் நீள்வட்ட பாதையில் செல்லாமல் பூமிக்கு மிக அருகில் வந்து செல்லும். இந்த நிகழ்வு தான் வரும் 14 ஆம் திகதி நிகழ இருக்கிறது.
இந்த நிகழ்வு கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வந்ததைவிட சிறப்பானதாக இருக்கும்.
இதற்காக அமீரக விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ‘சூப்பர் மூன்’ வானில் எந்த அளவு தெளிவாகவும், பெரிதாகவும் இருக்கும் என்பதை நாசா படமாக வெளியிட்டுள்ளது.
14 ஆம் திகதி வானில் நிகழும் அதிசயம் தெரியுமா?
Reviewed by Author
on
November 10, 2016
Rating:
Reviewed by Author
on
November 10, 2016
Rating:


No comments:
Post a Comment