சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 இந்தியர்கள் உற்பட 6 பேர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்.-Photos
மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 7 இந்தியர்கள் தப்பிச் சென்ற நிலையில் குறித்த 7 இந்தியர்களில் 5 பேர் நேற்று(10) வியாழக்கிழமை இரவு தலைமன்னார் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த 5 இந்தியர்களும்,அவர்களுக்கு உதவிய மன்னாரை சேர்ந்த ஒருவரும் இன்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 7 இந்தியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (8) தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற குறித்த 7 இந்தியர்கள் தொடர்பாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் மிரிஹான பொலிஸாரும் இணைந்து விசாரனைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த இந்தியர்கள் 7 பேரும் தப்பிச் சென்ற விடயம் தொடர்பில் தெளிவு படுத்துவதற்காக எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மிரிஹான தலைமை பொலிஸ் பரிசோதகருக்கு நீதவான் அறிவித்தல் அனுப்பியுள்ளார்.
மேலும்; தப்பிச் சென்றுள்ள 7 இந்தியப் பிரஜைகளையும் கைது செய்யும் வகையில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலே குறித்த 7 இந்தியர்களில் 5 பேர் நேற்று (10) வியாழக்கிழமை இரவு தலைமன்னார் கடல் வழியாக இந்தியாவிற்கு தப்பிச் செல்வதற்காக மன்னாருக்கு வந்து தலைமன்னார் சென்ற போது தலைமன்னார் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 5 இந்தியர்களில் 4 பேர் பேசாலை பொலிஸ் நிலையத்திலும் ஒருவர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்திலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்த நிலையில் பொலிஸார் அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதோடு,அவர்களுக்கு உதவியதாக தலை மன்னாரைச் சேர்ந்த ஒருவரும் பொலிஸார் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் கைது செய்யப்பட்ட குறித்த 5 இந்தியர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இடம் பெறவுள்ள வழக்கு விசாரனைகளுக்கு ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்டதோடு,
இந்தியர்களுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட தலைமன்னாரைச் சேர்ந்த நபரை 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீதப்பிணையில் செல்ல மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 இந்தியர்கள் உற்பட 6 பேர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்.-Photos
Reviewed by NEWMANNAR
on
November 11, 2016
Rating:

No comments:
Post a Comment