மன்னாரில் 2 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு-5 பேர் கைது.
மன்னார் வங்காலை பகுதியில் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதப்பொருட்களுடன் 5 பேரை மன்னார் பொலிஸார் இன்று(7) திங்கட்கிழமை காலை கைது செய்துள்ளனர்.
மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த 2 கோடி ரூபாய் பெறுமதியான சுமார் 2 கிலோ கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றனர்.
எனினும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பான உண்மை விபரங்களை இது வரை மன்னார் பொலிஸார் ஊடகங்களிலுக்கு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 2 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு-5 பேர் கைது.
Reviewed by NEWMANNAR
on
November 07, 2016
Rating:

No comments:
Post a Comment