மன்னார் தாழ்வுபாட்டு கடற்கரைப்பகுதியில் கரை ஒதுங்கியுள்ள பாரிய உயிரினம்.-Photos
தாழ்வுபாடு கடலோரப்பகுதியில் உயிரிழந்த நிலையில் பாரிய கடல் வாழ் உயிரினம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த நிலையில் கரையொதுங்கிய குறித்த உயிரினம் கடல் பன்றி எனவும் சுமார் 5 அடி நீளமும் 450 தொடக்கம் 500 கிலோ கிராம் எடை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-மன்னார் தாழ்வுபாட்டு கடலில் வித்தியாசமான ஓர் உயிரினம் இறந்த நிலையில் மிதந்து வந்த நிலையில் குறித்த கடற்பகுதிக்குச் சென்ற கடற்படையினர் குறித்த கடற்பன்றியை மீட்டுள்ளனர்.
இதன் போது மன்னார் வனவிலங்கு திணைக்கள அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த கடற்பன்றியை பார்வையிட்டுள்ளார்.
எனினும் உயிரிழந்தது முளையூட்டியான 'ஆபிரியா' எனப்படுகின்ற ஓர் கடல் வாழ் உயிரினம் என அறிய முடிகின்றது.
எனினும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த கடல் உயிரினத்தை கடற்படையினர் கடற்கரையில் புதைத்து விட்டதாகவும் அறிய முடிகின்றது.
மன்னார் தாழ்வுபாட்டு கடற்கரைப்பகுதியில் கரை ஒதுங்கியுள்ள பாரிய உயிரினம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
November 08, 2016
Rating:

No comments:
Post a Comment